உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி மாணவர்கள் கலாசார ஊர்வலம்

பள்ளி மாணவர்கள் கலாசார ஊர்வலம்

கமுதி: -கமுதியில் கவினா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் சார்பில், கலாசார ஊர்வலம் நடந்தது.பள்ளி தாளாளர் ஹேமலதா தலைமை வகித்தார். முதல்வர் காஞ்சனா வரவேற்றார். ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் அப்துல் வஹாப் சகாராணி துவக்கி வைத்தார். கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி பஜார், பஸ் ஸ்டாண்ட், மருது பாண்டியர் சிலை, முத்துமாரியம்மன் கோயில், வாரச்சந்தை வழியாக மீண்டும் பேரூராட்சி வரை மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதமாக சிலம்பம், ஸ்கேட்டிங், கராத்தே, மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலி உட்பட பல்வேறு வேடம் அணிந்து கலாசாரத்தை வெளிக்காட்டும் வகையில் பாரம்பரிய உடைகள் அணிந்து ஊர்வலமாக சென்றனர். பெற்றோர், ஆசிரியர்கள் பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை