உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொண்டியில் கடல் நீர்மட்டம் உயர்வு: மீன்வளத்துறை ஆய்வு

தொண்டியில் கடல் நீர்மட்டம் உயர்வு: மீன்வளத்துறை ஆய்வு

தொண்டி: தொண்டியில் கடல் நீர் மட்டம் அடிக்கடி உயர்வதால் மீன்வளத்துறையினர் கடற்கரை ஓரங்களில் ஆய்வு செய்தனர். தொண்டி கடற்கரை பகுதியில் கடல் நீர் மட்டம் அடிக்கடி உயர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு புதுக்குடி பகுதியில் மீனவர் குடிசைகள் ஓரத்திலும், மரைன் போலீஸ்ஸ்டேஷன் வாசல் வரை கடல் அலை வந்தது. எப்போதும் இல்லாத அளவிற்கு கடல் நீர்மட்டம் உயர்ந்ததால் மீனவர்கள் அச்சமடைந்தனர். இது குறித்து நேற்று மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத், தொண்டி மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர், மரைன் எஸ்.ஐ., அய்யனார் மற்றும் அலுவலர்கள் ராமநாதபுரம் ஆற்றங்கரையில் இருந்து எஸ்.பி.பட்டினம் வரை கடற்கரைக்கு சென்று ஆய்வு செய்தனர். மீனவர்களிடம் கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகளை பாதுகாப்பாக கயிறு கட்டி வைக்குமாறு கூறினர். இது குறித்து மீன்வளத்துறையினர் கூறுகையில், அக்., நவ., மாதங்களில் கடல் நீர் மட்டம் உயர்வது வழக்கமான நிகழ்வு தான். கடற்கரை ஓரத்தில் வசிப்பவர்கள் அச்சமடைய வேண்டாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ