மேலும் செய்திகள்
கழிவு நீரால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து
12-Jul-2025
இறந்த கடல் குதிரைகள் வைத்திருந்த ஆசாமி கைது
28-Jul-2025
பெரியபட்டினம்; பெரியபட்டினம், ஆஞ்சநேயர்புரம், களிமண்குண்டு, சேதுக்கரை, காஞ்சிரங்குடி உள்ளிட்ட மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் தற்போது அதிகளவு கடல் புற்கள் ஒதுங்கி வருகின்றன. தற்போது ஆடி மாதத்தில் அதிகளவு காற்று வீசும் தன்மை கொண்டதாக உள்ளதால் தீவுகளை சுற்றி ஆழம் குறைவான பகுதிகளில் வளரக்கூடிய கடல் புற்கள் மற்றும் கடல் பாசிகள் காற்றின் வேகத்தால் இழுத்துச் செல்லப்பட்டு கரைப்பகுதியில் ஒதுங்குகின்றன. கடலில் இயற்கையாக விளையக்கூடிய கடல்புல் மற்றும் கடல் பாசிகளை கடல் பசு உள்ளிட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உணவாக உட்கொள்கின்றன. நாட்டுப் படகில் குறிப்பிட்ட ஆழத்திற்கு சென்று கடல் பாசிகளை சேகரித்து அவற்றை கடற்கரைப் பகுதிகளில் உலர்த்தி கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவுகிறது. சேகரிக்கப்படும் சர்க்கஸம், பக்கோடா ரக கடல்பாசிகளை உரிய முறையில் பதப்படுத்தப்பட்டு ராணிப்பேட்டை சென்னை உள்ளிட்ட தொழிற்சாலை களுக்கு துணிகளுக்கு சாயம் ஏற்றவும், உரம் தயாரிக்கவும், மருந்து பொருள்களின் பயன்பாட்டிற்கும் சேகரிக்கப் பட்ட கடல்பாசிகள் கொண்டு செல்லப் படுகின்றன. தற்போது காற்றின் வேகத்தின் தாக்கத்தால் அதிகளவு கடல் பாசிகள் கரைகளில் ஒதுங்கு கின்றன. இதனால் மீன் வலைகளில் அதிகளவு கடல் பாசிகள் சிக்குவதால் மீனவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.
12-Jul-2025
28-Jul-2025