ராமேஸ்வரத்தில் கடற்பாசி சமையல் பயிற்சி பட்டறை
ராமநாதபுரம்: அம்ருத விஸ்வ வித்யா பீடம் சார்பில் ராமேஸ் வரத்தில் கடற்பாசி சமையல் பயிற்சிப் பட்டறை மற்றும் கண்காட்சி 3 நாட்கள் நடந்தது. கடற்பாசி சாகுபடியில் ஈடுபட்டுள்ள ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைந்து புதிய உணவு வகைகளை உருவாக்குதல், உணவுப் பாதுகாப்பு மற்றும் சிறு தொழில் உற்பத்தி நுட்பங்கள் குறித்த செயல்முறை பயிற்சி களைப் பெற்றனர். அப்போது சமையல் வல்லுநர்களான ெஷப் ஹர்ஷ் தீக் ஷித், உணவு ஆலோசகர் கனிகா ஷெட்டி ஆகியோருடன் மகளிர் குழுவினர் கலந்துரையாடினர். கடற்பாசியைக் கொண்டு உணவுப் பொருட்களை உருவாக்கி அவற்றை பொதுச் சந்தைகளில் விற்பனை செய்வதற்கான வழிமுறைகளைப் பகிர்ந்து கொண்டனர். மேலும் ராமநாதபுரம் அம்ருத வித்யாலயத்தில் நடந்த கடற்பாசி உணவுக் கண்காட்சியில் பெண்கள் தயார் செய்த கடற்பாசி பிரியாணி, கட்லெட், பக்கோடா, அல்வா போன்ற புதுமையான உணவு வகைகளை காட்சிப்படுத்தினர். இந்த கடற்பாசி வாழ்வாதாரத் திட்டம், அம்ருத விஸ்வ வித்யாபீடம், உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், டெரி இ.எஸ்.ஆர்.ஐ., ஆகிய வற்றுடன் இணைந்து மேற்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகும். இயற்கை வளங்களைப் பயன்படுத்தி சமூக பங் களிப்புடன் கூடிய புதுமை களின் மூலம் கடலோரப் பகுதிகளின் மீள் தன்மையை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.