| ADDED : ஜன 31, 2024 01:25 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுாரில் சரக்கு வாகனத்தில் ரேஷன் பருப்பு கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., மோகன் தலைமையில் ஏட்டுகள் முத்துகிருஷ்ணன், குமாரசாமி, தேவேந்திரன் ஆகியோர் பார்த்திபனுார் நான்கு ரோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.அதில் 25 மூடைகளில் 750 கிலோ ரேஷன் துவரம் பருப்பு இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அக்கடத்தலில் ஈடுபட்ட விருதுநகர் மாவட்டம் யானைகுழாய் பகுதியை சேர்ந்த செபாஸ்டின் 56, மைக்கேல்ராஜ் 29, ஆகியோரை கைது செய்தனர்.