உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் மதுபானம் மற்றும் போதை பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் ராஜ மனோகரன் முன்னிலை வகித்தார். முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். முதல்வர் நிர்மல் கண்ணன் மற்றும் செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ராஜசேகர், கலால் உதவி ஆணையர் சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.போதை பொருள்கள் தடுப்பு தொடர்பான பல்வேறு கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்டவைகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை