உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  கல்லுாரியில்  கருத்தரங்கு

 கல்லுாரியில்  கருத்தரங்கு

ராமநாதபுரம்: நவ.,19 முதல் 25 வரை உலக மரபு வார விழாவை முன்னிட்டு தமிழ்நாடுஅரசு தொல்லியல் துறை சார்பில் ராம நாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல்கல்லுாரியில்'இரும்பு நாகரிகம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார்.முதல்வர் ஆனந்த் வரவேற்றார். மாவட்டத் தொல்லியல் அலுவலர்சுரேஷ் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வுநிறுவனத்தின் தலைவர் ராஜகுரு பேசுகையில், பொன், இரும்பொன், கரும்பொன், கருந்தாது, எஃகு, கருமைக் கொல்லன், உலை, உலைக்கூடம் போன்ற கலைச் சொற்கள் சங்க காலத்தின் இரும்புதொழில் நுட்ப அறிவுக்கு சான்று பகர்கின்றன. பெருங்கற்காலநினைவுச் சின்னங்களும் இரும்பு உருக்கு உலையின் தடயங்களும் பல இடங்களில் இணைந்தே காணப்படுகின்றன என்றார். அதன் பிறகு மாணவியர் ராமலிங்கவிலாசம் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அதன் அமைப்பு, ஓவியச் சிறப்புகள் பற்றிஅவர்களுக்கு சொல்லப்பட்டு, அங்கிருந்த சேதுபதி மன்னர் கல்வெட்டைபடியெடுக்கும் முறையும் கற்றுக்கொடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை