உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தாதனேந்தல் கிராமத்திற்கு டவுன் பஸ் விட கோரிக்கை ஏழு கிராமங்கள் பயனடையும்

தாதனேந்தல் கிராமத்திற்கு டவுன் பஸ் விட கோரிக்கை ஏழு கிராமங்கள் பயனடையும்

திருப்புல்லாணி: -திருப்புல்லாணி கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 7 கி.மீ.,ல் உள்ள தாதனேந்தல் கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் ஏழு கிராம மக்கள் சிரமப்படுகின்றனர்.தாதனேந்தல் கிராமத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். திருப்புல்லாணி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள டவுன் பஸ் நிறுத்தத்தில் இருந்து 2 கி.மீ., நடந்து செல்கின்றனர். தற்போது புதியதாக சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. எனவே தாதனேந்தல் வழியாக கிராமத்திற்கு பஸ் விடும் பட்சத்தில் ஏழு கிராமங்கள் பயன்பெறும். திருப்புல்லாணியைச் சேர்ந்த ரத்தினகுமார் கூறியதாவது:சுதந்திரம் அடைந்த காலம் முதல் தற்போது வரை பஸ் வசதி இல்லாததால் கிராம மக்கள் நடந்தே செல்கின்றனர். கிராமத்தின் வழியாக உத்தரவை, பள்ளபச்சேரி, நம்பியான் வலசை, மேதலோடை, கொட்டியக்காரன் வலசை, ரெட்டையூரணி ஆகிய கிராமங்களுக்கான வழித்தடம் உள்ளது.தற்போது கிராமங்களுக்கான தார் சாலை நன்றாக உள்ள நிலையில் பஸ் போக்குவரத்து புதியதாக துவக்க வேண்டும். இது குறித்து கலெக்டருக்கு மனு அளித்துள்ளேன். எனவே போக்குவரத்து அதிகாரிகள் புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ