உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கருங்குளத்தூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

கருங்குளத்தூர் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி ஊராட்சி கருங்களத்துார் ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பு மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கின்றனர். அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.இங்குள்ள காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அப்பகுதியில் முறையான குடிநீர் ஆதாரம் இல்லாததால் முழுமையாக காவிரி கூட்டு குடிநீரையே அப்பகுதி மக்கள் நம்பி இருந்தனர். இந்நிலையில் நான்கு மாதங்களுக்கும் மேலாக காவிரி கூட்டு குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இங்குள்ள நீர்த்தேக்க தொட்டியிலும் தண்ணீர் நிரப்புவது இல்லை. இதனால் ஒரு கி.மீ., நடந்து சென்று தேசிய நெடுஞ்சாலையோர குடிநீர் குழாய் ஏர்வால்வில் கசியும் குடிநீரை பெண்கள் குடங்களில் சேகரித்து வருகின்றனர். அப்பகுதியில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதுகாப்பற்ற குடிநீரை ரூ.12க்கு விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் அவல நிலையில் கிராமத்தினர் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் தெரிவித்தனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ