உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நுாலகம் அருகே தேங்கும் கழிவுநீர்: துர்நாற்றத்தால் வாசகர்கள் அவதி

நுாலகம் அருகே தேங்கும் கழிவுநீர்: துர்நாற்றத்தால் வாசகர்கள் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே டி-பிளாக் ரோட்டில் உள்ள மாவட்ட மைய நுாலகம், எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே கழிவுநீர் தேங்கியுள்ளது. பட்டணம்காத்தான் ஊராட்சி டி-பிளாக் ரோட்டில் மாவட்ட மைய நுாலகம் மற்றும் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதன் அருகே சாக்கடை கால்வாய் பராமரிப்பின்றி குப்பை குவிந்து கழிவுநீர் தேங்கியுள்ளது. துர்நாற்றம், கொசுத் தொல்லையால் நுாலகத்தில் படிக்க வரும் வாசகர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கழிவுநீர் தேங்காத வகையில் குப்பையை அகற்றி சுத்தம் செய்வதற்கு பட்டணம் காத்தான் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை