காவிரி குடிநீர் குழாயில் வந்த குட்டி மீன்களால் அதிர்ச்சி
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் பெண்கள் குழாயில் காவிரி குடிநீர் பிடித்த போது குட்டி மீன்கள் வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.முதுகுளத்துார் பேரூராட்சி பகுதியில் ரோட்டோரத்தில் குழாய் பதிக்கப்பட்டு காவிரி குடிநீர் வழங்கப்படுகிறது. இங்கு பல்வேறு தெருக்களில் உள்ள குழாயில் வரும் காவிரி குடிநீரை மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் முதுகுளத்துார் -ராமநாதபுரம் ரோடு சுடலை மாடன் கோயில் அருகே வழக்கம் போல் மக்கள் குழாயில் காவிரி குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது குழாயில் இருந்து குட்டி மீன் குஞ்சுகள் வந்தன. இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மக்கள் அவற்றை டப்பாவில் அடைத்து வைத்தனர். இதையடுத்து குடிநீரை பயன்படுத்துவதற்கு மக்கள் தயக்கம் காட்டினர்.