உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை

ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுகிறது.உத்தரகோசமங்கை அருகே கீழச்சீத்தை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு சுற்று வட்டார 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள் நோயாளியாகவும், புற நோயாளியாகவும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு இரவு நேர டாக்டர் இல்லாத நிலை உள்ளது. நோயாளிகள் கூறியதாவது: இங்கு பணிபுரிந்த டாக்டர் மாற்றுப் பணியாக பெரியபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனால் இங்கு டாக்டர் பற்றாக்குறை பல மாதங்களாக உள்ளது. இரவு நேரத்தில் டாக்டர்கள் இன்றி நர்ஸ்கள் மட்டுமே உள்ளனர். விஷக்கடி, தலைவலி, காய்ச்சல் உள்ளிட்ட அத்தியாவசிய சிகிச்சை பெறுவதற்கு டாக்டர் இல்லாததால் ராமநாதபுரம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகத்தினர் உத்தரகோசமங்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை