உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பொங்கலுக்கு பாரம்பரிய மண் பானை விற்பனை மந்தம்: வியாபாரிகள் பாதிப்பு

பொங்கலுக்கு பாரம்பரிய மண் பானை விற்பனை மந்தம்: வியாபாரிகள் பாதிப்பு

ராமநாதபுரம், : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் விற்பனை செய்வதற்காக வெளியூர்களிலிருந்து மண்பானைகள் வந்துள்ளன. விலை உயர்வால் எதிர்பார்த்த விற்பனையின்றி வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம், சுற்றுப்புற கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளுடன் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு இன்று (ஜன.15ல்) பொங்கலை முன்னிட்டு மானாமதுரை, மதுரை உள்ளிட்ட வெளியூர்களிலிருந்து மண் பானைகள் வாங்கி வந்து வியாபாரிகள் விற்கின்றனர். கலர் மண்பானை ரூ.300, சாதாரண மண்பானை ரூ.200 முதல் ரூ.250 வரை அளவு, வேலைப்பாடுகளுக்கு ஏற்றவாறு விற்கப்படுகிறது.மண் அள்ளுவதில் கட்டுப்பாடுகள் காரணமாக மண்பானைகள் வரத்து குறைந்துள்ளது. விலையும் கடந்த ஆண்டைவிட உயர்ந்துள்ளது. பாரம்பரியமாக மண் பானையில் பொங்கலிடும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்து வருவதாலும் சில்வர், வெண்கலப் பானைகள் ஆதிக்கத்தாலும் மண் பானைகள் வாங்குவது குறைந்துள்ளது. இவ்வாண்டு பொங்கல் பானை விற்பனையில் எதிர்பார்த்த லாபமில்லை என வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை