மேலும் செய்திகள்
சிலிண்டர் வெடித்து தீ விபத்து
11-Nov-2024
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் குடிசை வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பிடித்து எரிந்தது.மண்டபம் தண்டயல் தெருவை சேர்ந்தவர் அம்ஜத்கான் 42. இவரது வீட்டில் நேற்று மாலை திடீரென மின்வயரில் கசிவு ஏற்பட்டு குடிசையில் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென எரிந்து பரவியதால் அருகில் உள்ள செய்யது இபுராகிம் ஷா 56,குடிசை வீட்டிலும் பரவி எரிந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்தபடி வெளியேறினர்.இந்த தீயால் வீட்டில் இருந்த பீரோ, துணிகள், கட்டில் எரிந்து நாசமானது. தகவலறிந்த மண்டபம் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தால் இரு வீட்டு உரிமையாளர்களுக்கும் ரூ.5 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மண்டபம் போலீசார் விசாரிக்கின்றனர்.
11-Nov-2024