உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  முதுகுளத்துார் அருகே மண் சரிவை கட்டுப்படுத்த ஈட்டி கற்றாழை செடி

 முதுகுளத்துார் அருகே மண் சரிவை கட்டுப்படுத்த ஈட்டி கற்றாழை செடி

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தில் சாலையோரத்தில் உள்ள விவசாய நிலத்தில் ஏற்படும் மண் சரிவை கட்டுப்படுத்த ஈட்டி கற்றாழை செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரம் கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கிராமத்தில் இருந்து கண்மாய்க்கரை வழியாக அபிராமம் செல்லும் ரோடு மற்றும் கடம்பன்குளம் கிராமத்திற்கு செல்லும் ரோடு பகுதிகளில் நெல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். ரோட்டை விட தாழ்வாக விவசாய நிலங்கள் இருப்பதால் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் விவசாயத்தில் செலவு செய்த பணத்தை கூட எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். விவசாயிகள் கூறியதாவது: கண்மாய்க்கரை ஓரத்தில் உள்ள நிலங்களில் ஈட்டி கற்றாழை செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. செடி அடர்ந்து புதர்போல் வளர்வதால் மழை பெய்தாலும் மண் அரிப்பு ஏற்படுவதில்லை. இதனால் ஏராளமான இடங்களில் ஈட்டி கற்றாழை செடி நட்டு வைத்து பாதுகாத்து வருகின்றோம். விவசாயிகள் நிலத்தில் ஏற்படும் மண் சரிவை கட்டுப்படுத்த ஈட்டி கற்றாழை செடி வளர்க்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ