உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான கணக்கீட்டு படிவங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுகளுக்கு சென்று வழங்கி வருகின்றனர். இதனை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து பரமக்குடி அருகே இடையர் குடியிருப்பு, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட நகராட்சி பகுதியில் பார்வையிட்டார். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதில் சந்தேகங்கள் இருந்தால் நிலை அலுவலர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள மக்களிடம் அறிவுறுத்தினார். தாசில்தார் வரதன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், வருவாய் துறையினர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை