சிறப்பு கிராம சபை கூட்டம்
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே லாந்தை ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. நவ.,1ல் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். துணை பி.டி.ஓ., திருமுருகன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் பழனிமுருகன் முன்னிலை வகித்தார். பணித்தள பொறுப்பாளர் சாந்தி, பிரியா உட்பட பலர் பங்கேற்றனர். மழைக்காலம் துவங்கிய நிலையில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் ஊராட்சியில் பொதுமக்கள் விடுக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.