உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை

திருவாடானை: தொண்டி உந்திபூத்த பெருமாள், பாண்டுகுடி லட்சுமிநாராயண பெருமாள், ஆலம்பாடி கலியுக பெருமாள், குளத்துார் குலசேகர பெருமாள், திருவாடானை வரதாராஜ பெருமாள் மற்றும் கிராமங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக நடந்த அபிேஷகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெருமாளுக்கு துளசி மாலை அலங்காரம் செய்யப்பட்டது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.*முதுகுளத்துார் அருகே பொசுக்குடி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோயிலில் பெரும்பூஜை விழா நடந்தது. காலை கணபதி ஹோமம் துவங்கி பெருமாளுக்கு பால், சந்தனம், பன்னீர், குங்குமம், திரவிய பொடி உட்பட 21 வகை அபிஷேகம் நடந்தது. கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடிமரத்திற்கு சமைக்கப்பட்ட உணவு பொருட்கள் படைக்கப்பட்டு அன்னபூஜை கொடுக்கப்பட்டது. மூலவரான பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை முன்னிட்டு கிராம மக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமானோர்​ கலந்து கொண்டனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை