உள்ளூர் செய்திகள்

விளையாட்டு போட்டி

கீழக்கரை: -கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி கஸ்துாரிபுரத்தில் பொங்கல் விழாவில் விளையாட்டு போட்டி நடந்தது. கோலப்போட்டி, ஓட்டப்பந்தயம், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கஸ்துாரிபுரம் கிராம மக்கள் செய்தனர்.முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மருதகம் கிராமத்தில் மாலை நேர கல்வி மையம் சார்பில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இங்கு கிராமத்தின் சார்பில் பொது பொங்கல் வைக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்பு ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக பிரிக்கப்பட்டு பல்வேறு போட்டிகள் நடந்தது. வென்ற மாணவர்களுக்கு ஊராட்சி தலைவர் சரஸ்வதி அம்மாள் பரிசுகள் வழங்கினார். உடன் ஆர்.ஐ., பெரியசாமி உட்பட மருதகம் அலுவலர் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை