உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம், காரைக்கால் மீனவர்கள் 47 பேர் கைது படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம், காரைக்கால் மீனவர்கள் 47 பேர் கைது படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்:இந்திய இலங்கை எல்லை அருகே நடுக்கடலில் மீன் பிடித்த ராமேஸ்வரம், காரைக்கால் மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து ரூ. 3 கோடி மதிப்புள்ள ஐந்து விசைப்படகுகளையும் சிறை பிடித்தனர். நேற்று முன் தினம் ராமேஸ்வரத்தில் இருந்து 260 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம் போல் இந்திய-இலங்கை எல்லை அருகே நடுக்கடலில் மீன்பிடித்தனர். அன்றிரவு அங்கு ரோந்து சென்ற இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கி முனையில் 4 படகுகளை மடக்கிப்பிடித்தனர். பின் படகுகளில் இருந்த மீனவர்கள் மரியசிலுவை மிக்கேல் 43, ஆரோக்கிய ரூபர்ட் 42, தர்மபுத்திரன் 56, முனியாண்டி 44, முனியராஜ் 37, ஆறுமுகம் 51, செல்வம் 48, சகாயவினோ 43, இருதயராஜா 32, கார்த்திக்குமார் 30, பாபு 61, மரிய சீமோன் 29, ஆறுமுகம் 55, முருகேசன் 52, மற்றும் பாலமுருகன் 51, சக்திவேல் 42, செந்துார்பாண்டி 42, குருசெல்வம் 48, கர்ணன் 45, பாக்கியராஜ் 48. ராமகிருஷ்ணன் 27, கண்ணன் 56, ரூபன்ஸ் 37, சூசைமரியான் 65, ஜெய்போக் 36, மனோஜ் 39, சமயபாண்டி 21, சக்திவேல் 22, அந்தோணி எடிசன் 35, காளிதாஸ் 45, ஆகியோரை கைது செய்து இலங்கை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். அவர்களை நேற்று மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து வவுனியா சிறையில் அடைத்தனர். மேலும் 17 மீனவர்கள் கைது அக்., 6ல் காரைக்காலில் இருந்து விஜயசிவராமன் என்பவரது ஆழ்கடல் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 17 மீனவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். இப்படகை இலங்கை கடற்படையினர் மடக்கி பிடித்து 17 பேரையும் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். ரூ. 3 கோடி படகுகள் ராமேஸ்வரம் மீனவர்களின் தலா ரூ.25 லட்சம் மதிப்புள்ள 4 விசைப்படகுகள், ரூ.2 கோடி மதிப்புள்ள காரைக்கால் மீனவரின் ஆழ்கடல் மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ. 3 கோடி மதிப்புள்ள 5 படகுகள் ஒரே நாளில் இலங்கை வசம் சிக்கியதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை