உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் மாநில இறகுப்பந்து போட்டி

ராமேஸ்வரத்தில் மாநில இறகுப்பந்து போட்டி

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்தில் நடந்த மாநில அளவிலான இறகு பந்து போட்டியில் ராமேஸ்வரம் மாணவர்கள் முதல் பரிசை வென்றனர். ராமேஸ்வரம் ஜெரோம் பேட்மிட்டன் அகாடமியில் நடந்த மாநில அளவிலான இறகு பந்து போட்டியில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்றனர். இதில் இரட்டையர் பிரிவில் ராமேஸ்வரம் பகுருதீன் மற்றும் ஜெரோஸ் ஜோடி முதல் பரிசை வென்றனர். இவர்களுக்கு ரூ.5000 ரொக்கப்பரிசு, நினைவு கோப்பை வழங்கப்பட்டது. மேலும் 15 வயதிற்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் காரைக்குடி ரோகித் முதல் பரிசு பெற்று ரூ.3000 பெற்றார். 13 வயது பிரிவில் ராமநாதபுரம் ஆதேஸ் முதல் பரிசுடன் ரூ.2000 பெற்றார். தங்கச்சிமடம் சாம் மரியோ 3ம் பரிசாக ரூ.1000ம், 11வயது பிரிவில் மதுரையை சேர்ந்த முகமதுபர்கான் முதல் பரிசு ரூ. 2000 வென்றனர். இவர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேரன் சலீம் பரிசுகளை வழங்கினார். போட்டி ஏற்பாடுகளை அகாடமி நிறுவனர் ஜெரோம் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி