மாணவர்களை துரத்தி கடித்த வெறி நாய்
கடலாடி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் இன்று (நவ.,16) காலை இரண்டு மாணவர்கள் உட்பட 3 பேரை வெறிநாய் விரட்டி கடித்ததால் மக்கள் அச்சமடைந்தனர். கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி வர்ஷினி, ஏழாம் வகுப்பு மாணவன் பசும்பொன் லிங்கம், சுப்பையா 70, இன்று காலை 8:30 மணிக்கு கடலாடி தாலுகா அலுவலகம் வழியாக நடந்து வந்தனர். அப்போது வெறிநாய் அவர்களை கடித்து ரத்தக்காயம் ஏற்படுத்தியது. கடலாடி அரசு தாலுகா மருத்துவமனையில் 3 பேரும் நாய் கடிக்காக சிகிச்சை பெற்றுச் சென்றனர். கடலாடி, சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வெறி நாய்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றன. அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.