மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
16 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
16 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
16 hour(s) ago
கமுதி: கோவிலாங்குளம் சீர்மரபினர் விடுதி சீரமைக்கபடாதததால் மாணவர்கள் அவதியுறுகின்றனர்.கமுதி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவிலாங்குளத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இதில் சீர்மரபை சேர்ந்த மாணவர்களுக்காக 35 லட்ச ரூபாயில் விடுதி கட்டப்பட்டது. சில மாதங்களிலேயே பல இடங்களில் விரிசல் ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மாணவர்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிகமாக ரைஸ்மில் கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால் ஓராண்டுக்கு மேல் ஆகியும் அக்கட்டடத்தில் தான் எந்த அடிப்படை வசதியும் இன்றி தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், விடுதி சீரமைக்கப்படவில்லை. மாணவர்கள் தற்பொழுது தங்கியுள்ள ரைஸ்மில் கட்டடத்தை சுற்றி கருவேலமரங்கள் இருப்பதால் விஷஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இது போன்ற சூழலில் இருப்பதால் அங்கு தங்கியுள்ள 60 மாணவர்களின் கல்வி மற்றும் உயிர் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே அசம்பாவிதம் நடைபெறும் முன்பு விடுதியை சீரமைத்து அங்கு மாணவர்களை தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago