உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாநில பளு துாக்கும் போட்டி மாணவனுக்கு வெண்கலம்

மாநில பளு துாக்கும் போட்டி மாணவனுக்கு வெண்கலம்

பரமக்குடி: சென்னையில் முதல்வர் கோப்பை 2025 மாநில அளவிலான பளு துாக்கும் போட்டிகள் நடந்தது. இதில் பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் ஹேமநாதன் பங்கேற்றார். இவர் 60 கிலோ எடை பிரிவில் ஸ்னாட்ஸ் முறையில் 82 கிலோ, கிளீன் அண்டு ஜெர்க் முறையில் 98 கிலோ என 180 கிலோ துாக்கினார். தொடர்ந்து 3ம் இடம் பிடித்த மாணவனுக்கு வெண்கலப் பதக்கம் ரூ. 50,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மாணவனை சவுராஷ்டிரா மேல்நிலை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் சாம்பியன் ஜிம் நிர்வாகிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை