உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குளவி கொட்டியதில் மாணவிகள் பாதிப்பு

குளவி கொட்டியதில் மாணவிகள் பாதிப்பு

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே குளவி கொட்டியதில் 2 மாணவிகள் உட்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருவாடானை அருகே 2 கி.மீ.,ல் உள்ளது செங்கமடை கிராமம். இக் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் திருவாடானையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். நேற்று காலை 8:00 மணிக்கு மாணவிகள் சைக்கிளில் திருவாடானையை நோக்கி சென்றனர். சுடுகாடு அருகே சென்ற போது இரு பக்கமும் ரோட்டோரத்தில் அடர்ந்துள்ள செடிகளிலிருந்து கருப்பு மற்றும் வெள்ளை நிற கோடுகள் கொண்ட விஷக் குளவிகள் கும்பலாக பறந்து சென்று கடித்தன. மாணவிகள் அட்சயா 13, பூஜாத்தி 10, ஆகியோருக்கு தலை மற்றும் கையில் கொட்டியதால் வலியால் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகில் வந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். அவர்களையும் குளவி கொட்டியது. இதில் செங்கமடை கிராமத்தை சேர்ந்த ஆனந்த் 32, பரமேஸ்வரி 42, தமயந்தி 36, உட்பட ஆறு பேரை கொட்டியது. அனைவரும் திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை