உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பேச்சு, கவிதைப்போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கலாம்

பேச்சு, கவிதைப்போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கலாம்

ராமநாதபுரம்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவர்களின் பேச்சாற்றல், படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் வகையில் பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜன.27 ல் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளும், கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜன., 25ல் நடைபெறவுள்ளன.போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அதற்குரிய படிவத்தை நிறைவு செய்து பள்ளி தலைமை யாசிரியர், கல்லுாரி முதல்வர், துறைத் தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் வழங்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லுாரியிலிருந்தும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் 3 மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2ம் பரிசு ரூ.7000, 3ம் பரிசு ரூ.5000 என பரிசுத் தொகை காசோலையாக வழங்கப்படும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை