உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் டூவீலர்களில் பள்ளிக்கு வரும் மாணவர்கள்

பரமக்குடியில் டூவீலர்களில் பள்ளிக்கு வரும் மாணவர்கள்

பரமக்குடி : -பரமக்குடியில் பள்ளி மாணவர்கள் டூவீலர்களில் வலம் வரும் நிலையில் ரோமியோக்களாக தங்களை உருவகப்படுத்திக் கொள்வதால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.பரமக்குடி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படுகிறது. பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் சிலர் டூவீலர்களில் வருவது வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு டூவீலர்களை ஓட்ட லைசென்ஸ் இன்றி வழங்குவது குற்றம். ஆனால் பெற்றோர் இது குறித்து கவலையின்றி பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.இதனால் பெரும்பாலான மாணவர்கள் தங்களது நண்பர்களை டூவீலர்களில் மூன்று பேர் வரை அமர வைத்து செல்கின்றனர். இது போன்றவர்கள் காலை பள்ளி துவங்கும் மற்றும் மாலை பள்ளி முடியும் நேரங்களில் தங்களை ரோமியோக்களாக உருவகப்படுத்தி சுற்றி திரிகின்றனர்.இதனால் தெருவில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். மேலும் சில மாணவர்கள் பள்ளி மாணவிகள் செல்லும் பகுதியில் அத்துமீறி வருவதால் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. ஆகவே போலீசார் டூவீலர்களில் செல்லும் மாணவர்களை கட்டுப்படுத்துவதுடன், பெற்றோர்களும் அசாதாரண சூழலை உணர்ந்து கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை