மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் 2 பேருக்கு டெங்கு
03-Nov-2024
ராமநாதபுரம்: புதுடில்லியில் நடக்கும் தேசிய குழந்தைகள் தின விழாவில் ராமநாதபுரத்தை சேர்ந்த நான்கு மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். புதுடில்லி தேசிய பாலபவனில் நவ.21 முதல் 23 வரை தேசிய குழந்தைகள் தினவிழா நடக்கிறது. இதில் தமிழ் நாடு அரசு கலைபண்பாட்டுத் துறை, மதுரை மண்டல கலைபண்பாட்டு மையம், ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் கலை நிகழ்ச்சியில் சிலம்ப ஆசிரியர் ஆகாஷ் தலமையில் மாணவர்கள் வீ.பிரகுல், து.ஹரி பிரித்திவிராஜ், ரா.கிஷோர், தி.புகழ்மதி ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.இவர்களை கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பாராட்டினார். உடன் மண்டல உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் திட்ட அலுவலர் லோகசுப்பிரமணியன் பங்கேற்றனர்.
03-Nov-2024