உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தனியார் பஸ்சில் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்து பயணம்

 தனியார் பஸ்சில் படிக்கட்டில் மாணவர்கள் ஆபத்து பயணம்

கமுதி: கமுதியில் இருந்து முதுகுளத்துார் செல்லும் தனியார் பஸ்சில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். கமுதி, பேரையூர் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் மேல்நிலைக் கல்விக்காக கமுதி செல்கின்றனர். இந்நிலையில் குறிப்பிட்ட நேரத்தில் அரசு பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் செல்வதற்காக இவ்வழியே வரும் பஸ்சில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். நேற்று விருது நகரில் இருந்து அருப்புக்கோட்டை, கமுதி வழியாக முதுகுளத்துார்,தேரிருவேலிக்கு மாலையில் தனியார் பஸ் இயக்கப்படுகிறது. அப்போது பஸ்சில் உள்ளே செல்லாமல் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர். இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் தொங்கியபடி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், கமுதி அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மாணவர்கள் செல்வதற்கு வசதியாக குறிப்பிட்ட நேரத்திற்கு அரசு பஸ் வசதி இல்லாததால் இவ் வழியே இயக்கப்படும் தனியார் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடியே பயணம் செய்கின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி இப்பகுதியில் காலை, மாலை நேரத்தில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ