மாநில போட்டியில் வென்ற மாணவிகள்
முதுகுளத்துார்; முதுகுளத்துார் அருகில் சாம்பக்குளம் கவினா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவிகள் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.கன்னியாகுமரியில் மாணவர்களுக்கான மாநில அளவிலான பண்பாட்டு போட்டிகள் நடந்தது. இதில் ராமநாதபுரம், மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். முதுகுளத்துார் அருகே கவினா இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.வயது அடிப்படையில் பல்வேறு போட்டிகள் நடந்தது. ஓவியப் போட்டியில் இப்பள்ளி 9ம் வகுப்பு கோபிகா முதலிடம், நினைவாற்றல் போட்டியில் 7ம் வகுப்பு ஜனரக்சனா 2ம் இடம், பேச்சு போட்டியில் 7ம் வகுப்பு கீர்த்திகா 3ம் இடம் பெற்றனர். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தாளாளர் ஹேமலதா உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.