உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாடித்தோட்டம் அமைக்க தோட்டக்கலையில் மானியம்

மாடித்தோட்டம் அமைக்க தோட்டக்கலையில் மானியம்

திருப்புல்லாணி : -திருப்புல்லாணியில் வீட்டில் மாடித்தோட்டம் அமைக்க தோட்டக்கலைதுறையில் 50 சதவீதம் மானிய விலையில் காய்கறி விதைகள் வழங்கப்படுகிறது.தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கூறியதாவது: மாடித்தோட்ட தொகுப்புகள் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் ஆறு வகையான காய்கறி விதைகளான தக்காளி, வெண்டை, அவரை, கத்தரி, மிளகாய், கீரை உள்ளிட்டவைகளாகும். செடி வளர்க்கும் பைகள் 6 எண்ணிக்கை, தென்னை நார் கட்டிகள் மற்றும் மகிழோ 400 கிராம் உயிர் உரம், 200கிராம் உயிரி கட்டுப்பாட்டு காரணி உரம் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து 100 மி.லி., ஆகியவை அடங்கிய தொகுப்பு ரூ. 900ஆகும்.இதில் மானியமாக (50 சதவீதம்) ரூ.450 போக மீதம் ரூ. 450 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். விவரங்களுக்கு திருப்புல்லாணி தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை