என்.எம்.எம்.எஸ்., தேர்வில் வெற்றி
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் பள்ளி மாணவர்கள் என்.எம்.எம்.எஸ்., எனப்படும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வில் வெற்றி பெற்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு படிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்விக்கு செல்லும் போது நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த தேர்வில் நயினார்கோவில் ஒன்றியம் மும்முடிசாத்தான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி சஞ்சனா, கங்கை கொண்டான் ஹமிதியா நடுநிலைப்பள்ளி மாணவன் விக்னேஸ்வரன் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களை நயினார்கோவில் வட்டார கல்வி அலுவலர் வாசுகி, தலைமை ஆசிரியர்கள் லலிதாம்பிகை, புஷ்பவள்ளி பாராட்டினர்.