ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சுமங்கலி பூஜை
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா செப்., 22 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை பள்ளி மாணவர்களின் பரதநாட்டியம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. பக்தர்களுக்கு பிரசாதமாக தினமும் பொங்கல், சுண்டல், புளியோதரை, தயிர் சாதம் உள்ளிட்ட பலவகை சாதங்கள் வழங்கப்படுகிறது. மாலை 4:30 மணிக்கு வல்லபை மஞ்ச மாதா முன்பு ஏராளமான பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடந்தது. மூலவர் வல்லபை மஞ்சமாதாவுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் அலங்கார மண்டபத்தில் கொலுவை பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்யவும் வந்திருந்தனர். ஏற்பாடுகளை வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.