உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலத்தை குளிர்வித்த கோடை மழை

ஆர்.எஸ்.மங்கலத்தை குளிர்வித்த கோடை மழை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக நேற்று மாலை பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கடும் வெயில் சுட்டெரித்த நிலையில் கோடை மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும், ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் பாசனத்தின் கீழ் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், எள், பருத்தி உள்ளிட்ட கோடை விவசாய பயிர்களுக்கு நேற்று பெய்த மழை ஏற்றதாக அமைந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ