உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாயிகளுக்கு நெல் விதைகள் வழங்கல்

விவசாயிகளுக்கு நெல் விதைகள் வழங்கல்

கமுதி: கமுதி அருகே செங்கப்படை பகுதியில் உள்ள அதானி சோலார் மின் உற்பத்தி நிலையம் சார்பில் விவசாயிகளுக்கு நெல் விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை அதிகாரி வினோத் தலைமை வகித்தார். மேலாளர் மணிவண்ணன், துணை மேலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். புதுக்கோட்டை, செங்கப்படை, ஊ.கரிசல்குளம், பாம்புல்நாயக்கன்பட்டி, தோப்படைப்பட்டி, சேந்தனேந்தல், சீமனேந்தல் உட்பட அதை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 890 விவசாயிகளுக்கு அதிக மகசூல் தரும் பருத்தி விதைகள், 310 விவசாயிகளுக்கு நெல் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல் முறை விளக்கம், பயன்கள் குறித்து கையேடுகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் வீரபாண்டி உட்பட நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ