உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி  அன்ன பூஜை

சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி  அன்ன பூஜை

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் விவேகானந்தர் கேந்திரம், கன்னியாகுமரி கிராம முன்னேற்ற டிரஸ்ட் சார்பில் விவேகானந்தர் ஜெயந்தி விழாவும், அன்னபூஜை விழாவும் நடந்தது.வெளிப்பட்டினம் முத்தாலம்மன் கோயிலில் நடந்த விழாவில் பஜனையும், அன்னபூர்ணா ஸ்தோத்ர பாராயணம், பகவத் கீதையின் விஸ்வரூப தரிசனம் பாராயணம் நடந்தது. பின் விவாகானந்த கேந்திரத்தின் கிராம முன்னேற்றத் திட்ட செயலாளர் ஐயப்பன் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார். தீபாராதனை நடந்தது.இதில் சேகரிக்கப்பட்ட அரிசியை அன்னபூரணி அலங்காரம் செய்திருந்தனர். பின் அரிசியை விகோனந்த கேந்திர பாலர் இல்லங்களுக்கும் காப்பகங்களில் பயிலும் 2000 ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கவும், ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ