உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை

பெருமாள் கோயிலில் ஊஞ்சல் சேவை

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் தை மூன்றாவது வெள்ளியில் ஊஞ்சல் சேவை நடந்தது.பரமக்குடி சவுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்ஸவம் நடப்பது வழக்கம். இதன்படி நேற்று முன்தினம் மாலை பெருமாள் தாயாருடன் ஏகாந்த சேவையில் ஊஞ்சலில் அருள் பாலித்தார்.சவுந்தரவல்லி தாயார் மண்டபத்தில் நடந்த ஊஞ்சல் சேவையில் பாகவதர்கள் பஜனை பாடல்கள் பாடினர். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு 8:00 மணிக்கு சிறப்பு தீபாராதனைகளுக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ