உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழக பூச்சிக்கொல்லி இலங்கையில் பறிமுதல்

தமிழக பூச்சிக்கொல்லி இலங்கையில் பறிமுதல்

ராமநாதபுரம்:தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை அங்குள்ள அதிரடிப்படையினர் பறிமுதல் செய்து 3 பேரை பிடித்து விசாரிக்கின்றனர். இலங்கைக்கு மிக அருகில் தமிழகத்தின் கடலோர மாவட்டமான ராமநாதபுரம்இருப்பதால் தமிழக கடல் வழியாக பல்வேறு பொருட்கள் இலங்கைக்கும், இலங்கையில் இருந்து தமிழகத்திற்கும் கடத்தப்படுவது தொடர்கிறது. இதில் தமிழகத்தில் இருந்து விசாயத்திற்கான பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம் கடத்தப்படுவதாக இலங்கை அதிரடிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து யாழ்ப்பாணம் மாவட்டம் வேலணை வள்ளிக்காடு, கல்லுண்டாய்முனை கடற்கரைப்பகுதியில் நடத்திய சோதனையில் தமிழகத்திலிருந்து சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட 8 பண்டல்களில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்து, உரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம். இக்கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி