| ADDED : பிப் 17, 2024 04:45 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஊரக வளர்ச்சித் துறையில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நீர் தொட்டி இயக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், துாய்மைக் காவலர்கள் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் அலுவலர்கள் பி.டி.ஓ., (கி.ஊ) மலைராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்.ஒவ்வொரு ஆண்டும் வழங்க வேண்டிய பண்டிகை கால முன்பணம் பெரும்பாலான ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதை விரைவில் வழங்க வேண்டும். துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்களுக்கு கடந்த மூன்றாண்டுகளாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததால் ஊழியர்கள் பாதிப்படைந்துள்ளனர். உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். ஆர்.எஸ்.மங்கலம் வட்டார தலைவர் சந்தியாகுமேரி, செயலாளார் ஆனந்தி, பொருளாளர் சபிதா உட்பட பெரும்பாலான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.