உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள்  சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள்  சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவிஏற்பு விழா நடந்தது.மாநிலத்தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜான்போஸ்கோ, மாநில செயலாளர்கள் புஷ்பகாந்தன், உதயசூரியன், மாநில சங்க தலைமை தேர்தல் அதிகாரி ராஜரத்தினம் முன்னிலை வகித்தனர். மாநில பொது செயலாளர் குமார் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார். ராமநாதபுரம் மாவட்ட கவுரவ தலைவர் நம்புராஜேஸ், மாவட்டத்தலைவர் கருப்பையா, செயலாளர் ஜெகநாத பூபதி, பொருளாளர் பாலகிருஷ்ணன் உட்பட புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் பழனிக்குமார், செயலாளர் ஜமால் முகமது, மாநில செயலாளர் காசிநாததுரை, நில அளவை அலுவலர் ஒன்றிப்பு தலைவர் வினோத்குமார், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் உட்பட பலர் பேசினர்.மாநில பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை