உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டாஸ்மாக் விற்பனையாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் விற்பனையாளர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சக்கரகோட்டையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் சித்தநாதன் தலைமை வகித்தார். செயலாளர் ராமபாண்டி, செயல் தலைவர் இளங்கோ, மாவட்ட பொருளாளர் தனபாலன் முன்னிலை வகித்தனர். இதில் காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை ஈடுபடுத்தக் கூடாது. பண பரிவர்த்தனை, ஸ்கேனிங் செய்ய ஆட்கள் இல்லாத நிலையில் காலி பாட்டில்களை திரும்ப பெறுவது சிரமம். எனவே அரசு காலி பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் மாற்று வழியில் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ