மேலும் செய்திகள்
காலிமனை வரி வசூலிக்க கிராம சபையில் தீர்மானம்
24-Nov-2024
திருவாடானை : திருவாடானை ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகளில் வரி வசூல் தீவிரமாக நடக்கிறது.வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, நுாலக வரி, உரிம கட்டணம் போன்ற வரி வசூல் பணிகளில் ஊராட்சி செயலர்கள் ஈடுபட்டுள்ளனர். மார்ச் இறுதிக்குள் 100 சதவீதம் வரி வசூலை குறிக்கோளாகக் கொண்டு இப்பணிகள் நடக்கிறது. ஊராட்சி செயலர்கள் தினமும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வசூல் செய்து உடனடியாக ரசீது வழங்குகின்றனர்.ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கூறுகையில், டிச.,க்குள் 50 சதவீதமும், மார்ச்சுக்குள் 100 சதவீதம் முழுமையாக வசூல் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சிகளின் வருவாயை பெருக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வரியை செலுத்தி ஒத்துழைக்க வேண்டும் என்றனர்.
24-Nov-2024