உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விபத்தில் டீ மாஸ்டர் பலி

விபத்தில் டீ மாஸ்டர் பலி

கமுதி: கமுதி அருகே அ.தரைக்குடி பஸ்ஸ்டாப் அருகே ரோட்டில் குறுக்கே வந்த ஆட்டின் மீது மோதியதில் டீ மாஸ்டர் நாகராஜன் இறந்தார். கமுதி அருகே வல்லக்குளத்தை சேர்ந்த நாகராஜன் 42. அபிராமத்தில் உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக பணி புரிகிறார். டி.புனவாசல் கிராமத்தில் உள்ள தனது குழந்தைகளை பார்த்து விட்டு டூவீலரில் வல்லக்குளம் சென்றார். அப்போது அ.தரைக்குடி பஸ்ஸ்டாப் அருகே எதிர்பாராத விதமாக ரோட்டில் குறுக்கே வந்த ஆட்டின் மீது மோதியதில் நாகராஜன் பலத்த காயமடைந்தார். கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பரிசோதித்த டாக்டர்கள் நாகராஜன் இறந்து விட்டதாக கூறினர். அபிராமம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !