உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ராமநாதபுரம வட்டார தலைவர் மு. சரவணன் தலைமை வகித்தார். தமிழக ஆசிரியர் கூட்டணி தலைவர் ரா.சரவணன், துணைத் தலைவர் ரமணி முன்னிலை வகித்தனர்.உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 2019 ஜாக்டோ -ஜியோ போராட்ட வழக்கு நிலுவை குற்றச்சாட்டுகளை ரத்து செய்தல்உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இயக்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை