தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய தேக்கு மர கட்டை
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 20 அடி நீள தேக்கு மரக்ட்டை கரை ஒதுங்கியது.தனுஷ்கோடி தெற்கு கடற்கரையில் நேற்று முன்தினம் 20 அடி நீளம், ஒரு அடி விட்டம் உள்ள தேக்கு மரக்கட்டை ஒதுங்கியது. கொரியா அல்லது ஜப்பான் நாடுகளில் இருந்து சரக்கு கப்பலில் கொண்டுவரப்பட்டு கடலில் விழுந்திருக்கலாம், காற்றின் வேகத்தில் தனுஷ்கோடியில் ஒதுங்கி உள்ளது என மீனவர்கள் தெரிவித்தனர். இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் என கூறினர். ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் அலுவலகத்திற்கு கட்டை கொண்டு செல்லப்பட்டது.