உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கேமரா செயல்பட துவங்கியது

கேமரா செயல்பட துவங்கியது

திருவாடானை: திருவாடானை பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் தினமலர் நாளிதழ் செய்திக்கு பின் செயல்படத் துவங்கியது.திருவாடானை பகுதியில் வாகன விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறுகுற்றச் சம்பவங்கள்அடிக்கடி நடக்கிறது.இதனால் குற்றங்களில் ஈடுபடுவோரை கேமரா பதிவு காட்சிகளை வைத்து போலீசார் நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.தனியார் நிறுவனங்களை சேர்ந்த சிலர்கண்காணிப்பு கேமராக்களை சொந்த செலவில் வழங்கி முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டது.ஆனால் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட கேமராக்கள் ஒரு ஆண்டாக செயல்படாமல் இருந்தது. திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் மதுரை- தொண்டி, திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை நான்கு ரோடு சந்திக்கும் இடமாக உள்ளது.இங்கு தொண்டியை சேர்ந்த சரவணா ஜூவல்லரி சார்பில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் மின் இணைப்பு வழங்காததால் கேமரா செயல்படாமல் இருந்தது.குற்றச் செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கேமராக்கள் செயல்பட போலீசார் நடவடிக்கை வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக மின் இணைப்பு வழங்கப்பட்டு கண்காணிப்புகேமராக்கள் செயல்படத் துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை