உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேர்தலில் போட்டியிடாத கட்சியினர் விளக்கமளிக்க ஆணையம் வாய்ப்பு

தேர்தலில் போட்டியிடாத கட்சியினர் விளக்கமளிக்க ஆணையம் வாய்ப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மகாத்மா காந்தி நேஷனல் லேபர் பார்ட்டி 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. அக்கட்சி நீக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்பாக அக்கட்சியின் விளக்கத்தை நேரில் தலைமை தேர்தல் அலுவலரிடம் அளிக்க இந்திய தேர்தல் கமிஷன் வாய்ப்பு அளித்துள்ளது. இந்தியத் தேர்தல் கமிஷன் தனது அறிக்கையில் ஏராளமான அரசியல் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத பல அரசியல் கட்சிகள் 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூடபோட்டியிடவில்லை. அவ்வாறான தமிழகத்தை சேர்ந்த கட்சிகளின் பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மகாத்மா காந்தி நேஷனல் லேபர் பார்ட்டி இடம் பெற்றுள்ளது. இக்கட்சி பதிவு செய்யப்பட்ட பின்னர் எந்த வேட்பாளரும், லோக்சபா, சட்டசபை மற்றும் எந்த ஒரு இடைத்தேர்தலிலும் 2019 ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக போட்டியிடவில்லை. எனவே இக்கட்சி செயல்படவில்லை என தெரிவித்துள்ளது. இக்கட்சியினை நீக்கம் செய்வதற்கு முன்பாக, ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக மகாத்மா காந்தி லேபர் பார்டியினை பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து ஏன் நீக்கம் செய்யக் கூடாது என்பதற்கான விளக்கத்தை நேரில் தலைமை தேர்தல் அலுவலரிடம் அளிக்க இந்திய தேர்தல் கமிஷன் வாய்ப்பு வழங்கியுள்ளது. அக்கட்சி விரும்பினால் எழுத்துப்பூர்வமாக விளக்கத்தை தலைவர் அல்லது பொதுச் செயலாளரின் பிரமாண பத்திரத்துடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் முறையாக இணைத்து ஆக.,26க்குள் அல்லது அதற்கு முன் தலைமை தேர்தல் அலுலவரிடம் நேரில் ஆஜராக வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை