உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில் விழாவில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு

கோயில் விழாவில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே காக்கூர் கிராமத்தில் வரணவாசி அம்மன் முளைப்பாரி, அய்யனார் கோயில் குதிரை எடுப்பு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது.போட்டியில் மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 15 காளைகள், 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு காளையை அடக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற காளைகள், வீரர்களுக்கு குத்து விளக்கு,ரொக்கப் பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. ஒருசில மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். விழாவில் முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை காக்கூர் கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !