உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 35 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இலங்கை துாதரகத்தில் முறையிட முடிவு

35 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இலங்கை துாதரகத்தில் முறையிட முடிவு

ராமநாதபுரம்:இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீனவர்கள், 35 பேரை விடுதலை செய்யக்கோரி, சென்னையில் உள்ள அந்நாட்டு துாதரகத்தில் முறையிட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.கடந்த ஆக., 8ல் பாம்பனில் இருந்து, நான்கு நாட்டு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 35 பேரை, எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்து, வாரியாபிலா சிறையில் அடைத்தனர்.இதுதொடர்பாக, புத்தளம் நீதிமன்றத்தில் இலங்கை அரசு சார்பில் தாக்கல் செய்த அறிக்கையில், நான்கு நாட்டுப்பகுகளை தவறுதலாக விசைப்படகு என குறிப்பிட்டனர். இதன் அடிப்படையில், நாட்டுப்படகு மீனவர்களை விசைப்படகு மீனவர்களாக கருதி, நீதிமன்றம் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்துள்ளது.இதுகுறித்து தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி கூறியதாவது:மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு மாவட்ட நிர்வாகம் வழியாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர். உண்ணாவிரதம் நடத்தியுள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை. நாட்டுப்படகுகளை தவறுதலாக, விசைப்படகு என வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை வாபஸ் பெற்று, 35 மீனவர்களையும் விடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த கட்டமாக சென்னையில் உள்ள இலங்கை துாதரக அலுவலகத்திற்கு சென்று, மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி முறையிட உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை