உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விவசாயிகளுக்கு கை கொடுக்கும் பண்ணை குட்டைகளால் மகிழ்ச்சி மழையால் நிரம்பியது

விவசாயிகளுக்கு கை கொடுக்கும் பண்ணை குட்டைகளால் மகிழ்ச்சி மழையால் நிரம்பியது

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை சுற்றுவட்டார பகுதிகளான களரி, பனையடியேந்தல், மரியராயபுரம், மேலமடை, கொம்பூதி, கருக்காத்தி, நல்லிருக்கை பகுதிகளில் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. 25 அடி அகலம், 50 அடி நீளம் கொண்ட பண்ணை குட்டைகள் நவ., டிச., மாதங்களில் பெய்த மழையால் முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. நெல், மிளகாய், பருத்தி, மல்லி சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் தண்ணீர் இல்லாத நிலையில் பண்ணை குட்டைகளின் தண்ணீரை மோட்டார் வைத்து பயன்படுத்துகின்றனர். நடப்பு ஆண்டில் எதிர்பார்த்த பருவமழை பெய்துள்ளதால் இங்குள்ள பண்ணை குட்டைகளில் கோடையிலும் வற்றாமல் நீர் நிறைந்து காணப்படும் நிலை உள்ளது. பண்ணை குட்டை அமைத்துள்ள விவசாயிகள் கூறியதாவது:பண்ணை குட்டையில் எட்டு அடி ஆழத்திற்கு தண்ணீர் நிரப்பி வைத்துள்ளோம். இதில் உணவு தேவை மற்றும் விற்பனைக்காக மீன்களை வளர்த்து வருகிறோம். பொதுவாக உத்தரகோசமங்கை சுற்றுவட்டார பகுதிகளில் பண்ணை குட்டைகள் பெரும்பாலான விவசாயிகளுக்கு கை கொடுத்து வருகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை